நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

MH17 வழக்கில் உள் ஆவணங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை: ஈ.சி.ஹ்.ஆர்

லண்டன்: 

2014 ஆம் ஆண்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியா எயர்லைன்ஸ் விமானம் MH17 சம்பவம் தொடர்பான சில அரசாங்க உள் பதிவுகளை வெளியிட நெதர்லாந்து கடமைப்பட்டிருக்கவில்லை என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் (ஈ.சி.ஹ் R) தீர்ப்பளித்துள்ளது.

NOS, RTL Nieuws, Volkskrant உள்ளிட்ட பல டச்சு ஊடக நிறுவனங்களால் இந்த வழக்கு கொண்டு வரப்பட்டது. அந்தச் sசம்பவம் தொடர்பான அமைச்சர் கூட்டங்களின் குறிப்புகள் உட்பட அரசாங்கத்தின் உள் அறிக்கைகளுக்கான அணுகலை அவர்கள் கோரினர்.

இருப்பினும், ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள நீதிபதிகள், டச்சு அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர். ஆவணங்களை வெளியிட மறுப்பதற்கு முன், அதிகாரிகள் கோட்பாடுகள், அளவுகோல்களை சரியாகக் கருத்தில் கொண்டதாக அவர்கள் தீர்ப்பளித்தனர்.

ஜூலை 2014 இல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த MH17 விமானம், கிழக்கு உக்ரைனில் மோதல் மண்டலத்தைக் கடக்கும் போது ராடாரில் இருந்து மறைந்தது.

அந்த விமானத்தில் இருந்த 298 பேர்களில் 80 குழந்தைகள் உட்பட 283 பயணிகளும், 15 பணியாளர்களும் இருந்தனர்.

அக்டோபர் 2015 இல் டச்சு பாதுகாப்பு வாரியம் நடத்திய 15 மாத விசாரணையில், அந்த விமானம் அப்பகுதியில் ரஷ்ய தயாரிப்பான புக் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று முடிவு செய்தது.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஊடகங்கள் தேசிய சட்டத்தின் கீழ் ஆவணங்களைக் கோரின. இருப்பினும், டச்சு அரசாங்கம், பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, பெரும்பாலான கோரிக்கைகளை நிராகரித்தது.

வெளியிடப்பட்ட சில ஆவணங்கள், கருப்பு நிறத்தில் (சென்சார் செய்யப்பட்டவையாக) இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சர்ச்சை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், 2017 ஆம் ஆண்டில், அந்த நாட்டின் மிக உயர்ந்த நிர்வாக நீதிமன்றத்தில் அந்த ஊடகக் குழு தோல்வியடைந்தது. வெளிப்படுத்துவதை விட பாதுகாப்பு நலன்கள் முக்கியம் என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதற்குப் பின்னர், அந்த மறுப்பு, தகவல்களைப் புகாரளிப்பதற்கும், பெறுவதற்குமான தங்கள் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதாக வாதிட்டு, அவர்கள் ECHR-க்கு மேல்முறையீடு செய்தனர்.

இருப்பினும், ஏழு நீதிபதிகள், அந்த விண்ணப்பத்தை நிராகரித்தனர். ஆவணங்களை வெளியிடுவதைக் கட்டாயப்படுத்த, மிகவும் விதிவிலக்கான சூழ்நிலைகளை விண்ணப்பதாரர்கள் நிரூபிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு ஒரு தனித் தீர்ப்பில், அதே நீதிமன்றம், அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்திய சம்பவத்திற்கும், 2014 ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் பரவலான மனித உரிமை மீறல்களுக்கும் ரஷ்யா பொறுப்பு என்று தீர்ப்பளித்தது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset