செய்திகள் மலேசியா
எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க பேட்டரி மாற்றும் அமைப்புடன் கூடிய மின்சார வாகன டாக்சிகள் அறிமுகம்: கபீர் சிங்
காஜாங்:
எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க பேட்டரி மாற்றும் அமைப்புடன் கூடிய மின்சார வாகன டாக்சிகள் நாட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று ஜிவி ரைட் தலைமை நிர்வாக அதிகாரி கபீர் சிங் மாண்ட் கூறினார்.
தானியங்கி பேட்டரி அமைப்புடன் கூடிய மின்சார வாகன டாக்சிகளை அறிமுகப்படுத்த நான்கு முக்கிய நிறுவனங்கள் ஒரு முக்கிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இது நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறை ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாக உள்ளது.
மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் கூட்டமைப்பின் கீழ் உள்ள இந்த முயற்சி, இவி ஆட்டோ வொர்க்ஸை சேர்ந்த ஹமிசி எம். ஹுசைன், வோல்ட்கெம் எனர்ஜிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டெரிக் என்ஜி, ஜிவி கார் இம்போர்ட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கபீர் மாண்ட், அலிரான்டெக் நிறுவனத்தைச் சேர்ந்த முகிலரசன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த திட்டம் தேசிய டாக்சி துறையின் திசையை வலுப்படுத்துவதோடு டாக்சி ஓட்டுர்களுக்கு நிலையான வருமானத்தை தரும்.
குறிப்பாக டாக்சி ஓட்டுநர்களின் உழைப்பை சரியான வழியில் செலவிட மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கமாருடின் முஹம்மது ஹுசைன் கூறினார்.
இப் புதிய முயற்சி பெட்ரோல், கேஸ் போன்ற எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.
அதே வேளையில் டாக்ஸி, இ-ஹெய்லிங் துறையை உயர் தொழில்நுட்ப மின்சார வாகனங்களை நோக்கி மாற்றுவதை இந்த ஒத்துழைப்பு துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜிவி ரைடு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கபீர் மாண்ட் கூறினார்.
வோல்ட்கெம் எனர்ஜிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள தானியங்கி பேட்டரி பொதுப் போக்குவரத்துத் துறையை மாற்றியமைக்கவிருக்கும் முக்கியப் புத்தாக்கங்களில் ஒன்றாகும்.
இந்தத் தொழில்நுட்பம், சார்ஜ் செய்வதற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, பிரத்யேக நிலையங்களில் குறுகிய நேரத்தில் பேட்டரிகளை மாற்ற உதவுகிறது.
இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஓட்டுநர்கள் சாலையில் செலவிடும் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவதால், அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஈட்டவும் உதவுகிறது என்று அவர் கூறினார்.
தொழில்துறையினருக்குத் தொடர்ந்து சுமையாக இருக்கும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளைக் கையாள்வதற்கான ஒரு நீண்டகாலத் தீர்வாகவும் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஓட்டுநர்களுக்கு ஒரு விரிவான தொகுப்பு வழங்கப்படும். இதில், ஒரு வருடத்திற்கு பேட்டரி மாற்றும் அமைப்புக்கான இலவச அணுகல், ஒரு நாளைக்கு 80 ரிங்கிட் என்ற குறைந்த வாடகையில் வாகன வாடகை, தேய்மான பாகங்கள் உட்பட முழுமையான பராமரிப்பு ஆகியவை அடங்கும்.
ஓட்டுநர்கள் முழுமையான பேட்டரி உத்தரவாதம், காப்பீட்டுப் பாதுகாப்பு, அத்துடன் ஈபிஎப், சொக்சோ ஆகியவற்றிற்கான பங்களிப்புகள் ஆகியவற்றிலிருந்தும் பயனடைவார்கள்.
ஆக இந்த முயற்சி டாக்சி ஓட்டுநர்களுக்கு புதிய நம்பிக்கையை தரும் என கபீர் சிங் மாண்ட் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 5:19 pm
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை; முர்ஷிதாபாத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
April 23, 2026, 4:35 pm
வட மண்டல ஒருமைப்பாட்டு வாரம் 2026: அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார் துணையமைச்சர் யுனேஸ்வரன்
April 23, 2026, 3:35 pm
மெக்ஸ் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: எதிர்திசையில் வந்த காரால் வங்காளதேசப் பயணி பலி
April 23, 2026, 12:38 pm
வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விநியோகம்; சுற்றுலாத் தலத்தில் ரகசியமாக இயங்கிய கும்பல் கைது
April 23, 2026, 12:20 pm
பள்ளி ஆசிரியரிடம் கதறிய மாணவி; பாலியல் வன்கொடுமை புகாரில் 3 மாணவர்கள் சிறையில்
April 23, 2026, 11:46 am
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல: ஃபஹ்மி
April 23, 2026, 11:45 am
