நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை முதல் டீசலின் விலை 85 சென் குறைகிறது

புத்ராஜெயா:

நாட்டில் நாளை முதல் நாடு முழுவதும் ரோன் 97, ரோன் 95 மானியமில்லா பெட்ரோல் விலைகள் முறையே 25 சென், 15 சென் குறைக்கப்படும்.

அதே நேரத்தில் தீபகற்பப் பகுதிகளில் டீசல் விலையும் 85 சென் குறைக்கப்படும்.

நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

ரோன் 97 பெட்ரோலின் விலை இன்று ஒரு லிட்டருக்கு 5.10 ரிங்கிட்டாக இருந்த நிலையில், தற்போது 4.85 ரிங்கிட்டாக குறைகிறது.


மேலும் ரோன் 95 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 4.02 ரிங்கிட்டில் இருந்து 3.87 ரிங்கிட்டாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபகற்பப் பகுதிகளில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 5.97 ரிங்கிட்டில் இருந்து 5.12 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படும்.

வரும் ஏப்ரல் 29 வரை எரிபொருள் விலைகள் அமலில் இருக்கும்.

இதற்கிடையில் பூடி 95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரோன் 95 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாகவும், சபா, சரவா, லாபுவானில் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகவும் மாற்றமின்றி உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset