செய்திகள் மலேசியா
வேலை வாய்ப்புகளிலிருந்து விலக்கப்பட்ட குழுக்களுக்கு உதவும் கூடுதல் திட்டங்கள்; அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: ஃபஹ்மி
புத்ராஜெயா:
உலகளாவிய விநியோக நெருக்கடியைத் தொடர்ந்து, வேலை வாய்ப்புகளிலிருந்து இன்னும் விலக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு உதவும் கூடுதல் திட்டங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேலை வாய்ப்பிலிருந்து விலக்கப்பட்ட குழுக்கள் தொடர்பான பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
ஆம். அடுத்த வாரம் கூடுதல் நடவடிக்கைகள் அறிவிக்கப்படுவது சாத்தியம். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
ஆனால் இது சம்பந்தப்பட்ட தொகையைக் கண்காணிப்பது தொடர்பான சில புள்ளிவிவரங்களைப் பற்றியதுதான் என்று அவர் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மே 1 அன்று நடைபெறும் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களின் போது கூடுதல் நடவடிக்கைகள் அறிவிக்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 5:49 pm
மலாக்கா நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது
April 22, 2026, 5:44 pm
தகவல்கள் இன்னும் முழுமையடையாததால் ஆர்எஸ்-1 அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை: அமிரூடின் ஷாரி
April 22, 2026, 5:43 pm
டான்ஶ்ரீ இசா சமத்தின் மறு ஆய்வு மனு: மே 13ஆம் தேதி விசாரிக்கப்படும்
April 22, 2026, 3:49 pm
மருத்துவமனையில் நூதன மோசடி: நோயாளிகளிடம் பணம் பறித்த பெண் கைது
April 22, 2026, 3:15 pm
பினாங்கு அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணிபுரிய மாட்டார்கள்: முதலமைச்சர்
April 22, 2026, 3:02 pm
