நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஶ்ரீ இசா சமத்தின் மறு ஆய்வு மனு: மே 13ஆம் தேதி விசாரிக்கப்படும்

கோலாலம்பூர்:

முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமது இசா அப்துல் சமத் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரிக்க கூட்டரசு நீதிமன்றம் மே 13 ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஆறு வருட சிறைத் தண்டனை, 15.45 மில்லியன் ரிங்கிட்  அபராதம் ஆகியவற்றை மறு ஆய்வு செய்யக் கோரி அவர் மனு  தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பின் மூலம் இந்தத் தேதி பெறப்பட்டது.

பின்னர் துணை அரசு வழக்கறிஞர் ஹப்சைனிஸாம் அப்துல் ஹஜிஸ்,  வழக்கறிஞர் டத்தோ அபு பாக்கார் ஆகியோர் இன்று ஊடகங்களிடம் இதை உறுதிப்படுத்தினர்.

77 வயதான முகமது இசா மார்ச் 4 அன்று, ஹபாரிஸாம் வான்  - ஆயிஷா முபாரக் என்ற சட்ட நிறுவனம் மூலம், 1995 ஆம் ஆண்டு கூட்டாரசு நீதிமன்ற விதிகளின் விதி 137இன் கீழ் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset