நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தகவல்கள் இன்னும் முழுமையடையாததால் ஆர்எஸ்-1 அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை: அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

முதல் சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்எஸ்-1) சாதனைகள் குறித்த முழுமையான அறிக்கையை சிலாங்கூர் அரசாங்கம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

ஏனெனில் அதன்  தகவல்கள் இன்னும் முழுமையடையவில்லை என்று மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

விரிவானதாக இல்லாத அல்லது அரைகுறையான ஒரு அறிக்கையை அவசரமாகச் சமர்ப்பிக்க மாநில நிர்வாகம் விரும்பவில்லை.

மாறாக ஒவ்வொரு தரவும் ஒழுங்கான மற்றும் முழுமையான முறையில் ஒழுங்கமைக்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறது.

நிச்சயமாக, தகவல்கள் இன்னும் முழுமையடையாததால் நாங்கள் அதைச் சமர்ப்பிக்கவில்லை.

இன்னும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் உள்ளன.  ஆனால் அவை இன்னும் முழுமையானதாக இல்லை. அதை அடுத்த கூட்டத்தொடரில் கொண்டு வருவது நல்லது.

நாம் ஒரு வேலையைச் செய்ய விரும்பினால், அதை எந்தவொரு தரப்பினரையும் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் செய்யாமல், முறையாகவும், கவனமாகவும், முழுமையாகவும் செய்ய வேண்டும்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற ஆர்எஸ்-1 மாதிரி விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset