செய்திகள் மலேசியா
திரெங்கானுவில் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: அரசு ஊழியர் உட்பட 146 பேர் அதிரடி கைது
சுக்காய்:
கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை திரங்கானுவில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து நாள் நடவடிக்கையில், தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு மையம் (ஏ.ஏ.டி.கே.), நான்கு பெண்கள் உட்பட 146 நபர்களைத் தடுத்து வைத்தது.
கெமாமான், செத்தியூ, மாராங் ஆகிய மூன்று மாவட்டங்களில் கைதுகள் நடத்தப்பட்டதாகத் திரங்கானு ஏ.ஏ.டி.கே. இயக்குநர் அர்ஸ்மி அப்துல்லாஹ் தெரிவித்தார்.
1983 ஆம் ஆண்டின் போதைப்பொருள் சார்பாளர்கள் (சிகிச்சை, மறுவாழ்வு) சட்டத்தின் பிரிவு 3(1) கீழ், போதைப்பொருள் பரிசோதனையில் நேர்மறையாக இருந்ததைத் தொடர்ந்து, 18 முதல் 61 வயதுக்குட்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
132 நபர்களுக்கு மெதாம்பேட்டமைன் பரிசோதனையில் நேர்மறை முடிவு கிடைத்ததாகவும், ஏழு பேருக்கு ஹெராயின் பரிசோதனையிலும், மேலும் ஏழு பேருக்கு கெட்டும் பரிசோதனையிலும் நேர்மறை முடிவு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
"தடுத்து வைக்கப்பட்டவர்களில், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், உணவகப் பணியாளர்கள், ஒரு தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோரும் அடங்குவர்" என்றார் அவர்.
அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் போதைப்பொருள், தடை செய்யப்பட்ட பொருட்களின் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்துவதும், போதைப்பொருள் பதுக்கல் இடங்களாக மாறிய இடங்களை அழிப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அர்ஸ்மி கூறினார். இதன் செயலாக்கத்தில் ஆறு அதிகாரிகள் உட்பட 69 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
சம்பந்தப்பட்டவர்கள் பொருத்தமான சிகிச்சை, மறுவாழ்வைப் பெற உதவுவதற்காக, கண்டறிதல், கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்துவதாக ஏ.ஏ.டி.கே. மேலும் கூறியது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 11:17 pm
இந்தியாவிற்கு செல்லும் மலேசியர்கள் கட்டாயம் வருகை அட்டைகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
April 22, 2026, 9:24 pm
நாளை முதல் டீசலின் விலை 85 சென் குறைகிறது
April 22, 2026, 5:49 pm
மலாக்கா நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது
April 22, 2026, 5:44 pm
தகவல்கள் இன்னும் முழுமையடையாததால் ஆர்எஸ்-1 அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை: அமிரூடின் ஷாரி
April 22, 2026, 5:43 pm
