நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

14 இடங்களில் சோதனை; 160 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 133 தனியார், நிறுவன கணக்குகள் முடக்கம்: செலியோ சோதனையின் கீழ் எம்ஏசிசி அதிரடி

புத்ராஜெயா:

செலியோ நடவடிக்கை மூலம் எம்ஏசிசி  14 இடங்களில் சோதனை நடத்தி, சுமார் 160 மில்லியன் ரிங்கிட் மொத்த மதிப்புள்ள 133 தனியார், நிறுவனங்களின் கணக்குகளை முடக்கியது.

எம்ஏசிசி சிறப்பு நடவடிக்கைகள் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ முகமது சம்ரி ஜைனுல் அபிடின் இதனை தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை பல மாநிலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவு, வகை குறித்த தவறான விவரங்களை அறிவிப்பதில் ஈடுபட்டிருந்த இறக்குமதியாளர்கள், கப்பல் முகவர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் குறிவைத்தது.

இதனால், கடந்த ஐந்தாண்டு காலத்தில் அரசாங்கத்திற்கு 1.5 பில்லியன் ரிங்கிட்  வரை சுங்க வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டது.

இந்தக் கும்பல் பல மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பணமோசடியில் ஈடுபட்டதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளைப் பாதுகாக்க அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது. 

தற்போதைய நடவடிக்கை எம்ஏசிசி சட்டம் 2009-இன் பிரிவுகள் 16 மற்றும் 17-இன் கீழும், பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதி தடுப்பு,  சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானச் சட்டம் 2001 இன் பிரிவு 4(1)(ஏ)இன் கீழும் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset