செய்திகள் உலகம்
சர்க்கஸில் அரங்கேறிய திகில் சம்பவம்: வலை அறுந்து விழுந்ததால் பார்வையாளர்களை நோக்கிப் பாய்ந்த புலி
ரோஸ்டோவ்-ஆன்-டான்:
ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரில் சர்க்கஸ் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த வலை திடீரென சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த எதிர்பாராத விபத்தால் அதிர்ச்சியடைந்த மூன்று புலிகளில் ஒன்று, ஆக்ரோஷமாகப் பாய்ந்து பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் நுழைந்ததால் மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓடினர்.
அந்தப் புலி தடையைத் தாண்டிப் பாய்ந்ததும் அங்கிருந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் பாதுகாப்பாக அணைத்துக்கொண்டனர். நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க, பார்வையாளர்களை அமைதியாக இருக்குமாறு பயிற்சியாளர்கள் கூச்சலிட்டனர்.
இருப்பினும், பீதியடைந்த மக்கள் உடனடியாகக் கூடாரத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். நல்வாய்ப்பாக, இந்தச் சம்பவத்தில் பார்வையாளர்களுக்கோ அல்லது சர்க்கஸ் ஊழியர்களுக்கோ எவ்வித உடல் காயம் ஏற்படவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கூடாரத்திலிருந்து தப்பிய அந்தப் புலி, அருகில் இருந்த சாலைக்கு ஓடியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், புலியைக் லாவகமாகப் பிடித்து மீண்டும் கூண்டிற்குள் அடைத்தனர்.
முன்னதாக, இத்தாலியின் ரோம் நகரில் இதேபோல் சிங்கம் ஒன்று தப்பித்துச் சாலைகளில் பல மணிநேரம் சுற்றித் திரிந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் சர்க்கஸ் கூடாரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 4:01 pm
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்
April 21, 2026, 10:48 am
சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்: சிறுவர்களைக் குறிவைக்கும் 'பாரா இன்ஃபுளுயன்சா'
April 21, 2026, 9:49 am
ஜப்பானின் ஆயுதப் புரட்சி: உலகச் சந்தையில் நுழையும் போர்க்கப்பல்களும் ஏவுகணைகளும்
April 20, 2026, 4:07 pm
