செய்திகள் உலகம்
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
டாக்கா:
வங்காளதேசத்தில் பரவலாகத் தொலைத் தொடர்பு முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போரால் வங்காளதேசத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டீசல் இல்லாவிட்டால் தகவல் நிலையங்களையும், அவற்றின் பாதுகாப்பு அமைப்புகளையும் இயக்க முடியாமல் போகலாம் என்று வங்கதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
தொடர்பு முடங்கினால் தொலைபேசியில் அழைத்துப் பேசவோ தகவல் பரிமாறவோ முடியாது, இணையத் தொடர்பும் பாதிக்கப்படலாம் என்று அவை கூறின.
வங்காளதேசம 95 விழுக்காட்டு எரிபொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.
மக்கள் பெட்ரோல் வாங்குவதற்கு 12 மணி நேரம் அல்லது அதற்கும் கூடுதலாக பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 12:50 pm
பிரசவ அறையாக மாறிய நீதிமன்றம்: மகிழ்ச்சியும் சோகமும் நிறைந்த நீதிமன்ற பிரசவம்
May 19, 2026, 10:40 am
காங்கோவில் இபோலோ தொற்றினால் 91 பேர் மாண்டனர்: அமெரிக்க விமான நிலையங்களில் கடும் பரிசோதனை
May 18, 2026, 7:26 pm
ராயல் கிங்க்ஸ் குழுமத் தலைவர் சிராஜுத்தீனுக்கு கலைச் செம்மல் விருது
May 14, 2026, 3:57 pm
பிரிட்டிஷ் சொகுசுக் கப்பலில் புதிதாக இப்போது நொரோவைரஸ்
May 12, 2026, 6:15 pm
