நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்

லண்டன்: 

ஒரு நூற்றாண்டைத் தொட்ட பயணம், எண்ணற்ற இதயங்களில் பதிந்த மரியாதை. காலம் மாறினாலும், மதிப்புகளைக் காக்கும் நிலைத்த சின்னம் ராணி எலிசபெத்.

இன்று தனது 100-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது தாயார், மறைந்த ராணி எலிசபெத் II-க்கு, பிரிட்டனின் மன்னர் சார்லஸ் III, ஒரு வீடியோ செய்தி மூலம் முழு உணர்ச்சிபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த முடியாட்சிக்கான இறுதி நினைவுச் சின்னத் திட்டம் வெளியிடப்பட்டபோது, இந்த உருக்கமான அஞ்சலி வழங்கப்பட்டது.

தனது தாயார் தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு உறுதியாகவும், நிலையாகவும், மிகவும் அர்ப்பணிப்புடனும் ஆட்சி புரிந்தார் என்று 77 வயதான சார்லஸ் உருக்கமாகக் கூறினார்.

70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், ராணி எலிசபெத், செப்டம்பர் 2022 இல், தமது 96 வயதில் காலமானார்.

"நாம் இப்போது கடந்து செல்லும் பல விஷயங்கள், அவரை மிகவும் கவலையடையச் செய்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

"இருப்பினும், நன்மை எப்போதும் வெல்லும், மேலும் பிரகாசமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது என்ற அவரது நம்பிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன்.

"14 வயதில் தனது முதல் உரையில் இளவரசி எலிசபெத் கூறியது போல, 'நாளைய உலகத்தை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதில்' நாம் ஒவ்வொருவரும் ஒரு பங்கை வகிக்க முடியும்.

"இது ஒரு நம்பிக்கை, அதை நான் முழு மனதுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார் அவர்.

மறைந்த ராணி எலிசபெத்தின் நினைவுச் சின்னம், சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸால் அவரை ஒரு இளம் பெண்ணாக, நேர்த்தியான சீருடையில் சித்தரிக்கும் ஒரு சிலையைக் கொண்டிருப்பதாக விளங்குகிறது.

1955 ஆம் ஆண்டில் இத்தாலிய கலைஞர் பியேட்ரோ அனிகோனியால் உருவாக்கப்பட்ட பிரபலமான ஓவியத்தால் இந்த வெண்கலச் சிலை ஈர்க்கப்பட்டது.

1954 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ராணி எலிசபெத் II-க்கு 28 வயதாக இருந்தபோதும், அவர் ஆட்சி செய்து சில ஆண்டுகளே ஆனபோதும், அனிகோனி அவரது உருவப்படத்தை வரைந்திருந்தார்.

அவரது முன்னாள் செயலாளரும், நினைவுச் சின்னத் திட்டக் குழுவின் தலைவருமான ராபின் ஜான்வ்ரின், அந்த உருவப்படத்தை 'தனது இளமைப் பருவத்தில் ராணி எலிசபெத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் படம்' என்று விவரித்தார்.

சிலை, அடித்தளத்தின் கலவையானது 7.3 மீட்டர் உயரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகிலுள்ள செயின்ட் ஜேம்ஸ் பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, அவரது கணவர் இளவரசர் பிலிப்பின் ஒரு சிறிய சிலையும் அந்தப் பகுதியில் இடம்பெறும். அந்தச் சிலை, இளவரசர் பிலிப்பை கடற்படை சீருடையில், தனது மனைவியை நோக்கிப் பார்க்கும் வகையில் சித்தரிக்கும்.

இன்று பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, திட்டமிடப்பட்ட சிலையின் மாதிரி, நினைவுச் சின்னத்தின் அளவை சார்லஸும், மற்ற அரச குடும்ப உறுப்பினர்களும் நேரில் பார்ப்பார்கள்.

ஏப்ரல் 21, 1926 இல் பிறந்த எலிசபெத், ராணியாக வேண்டும் என எதிர்பார்க்கப்படவில்லை.

1936 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் விதவையான வாலிஸ் சிம்ப்சனை மணந்து கொள்வதற்காக, அவரது மாமா எட்வர்ட் VIII பதவி துறந்ததைத் தொடர்ந்து, வரலாற்று மாற்றங்கள் அவரை சிம்மாசனத்தில் அமர வைத்தன.

அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், ராஜாவாக மாற விரும்பாத, மேலும் திக்கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை, ராஜா ஜார்ஜ் VI ஆக முடிசூட்டப்பட்டார்.

இருப்பினும், 1952 இல் அவரது மரணம், அந்த இளம் இளவரசி, 25 வயதில் சிம்மாசனத்தில் அமர வைத்து ஆட்சியின் தொடக்கத்தைக் குறித்தது.

இது உலகில் உள்ள எந்த முடியாட்சி முறையிலும் பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட காலமாக 1952 ஆம் ஆண்டு முதல் அவர் அரியணையில் இருந்தார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset