செய்திகள் உலகம்
சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்: சிறுவர்களைக் குறிவைக்கும் 'பாரா இன்ஃபுளுயன்சா'
பெய்ஜிங்:
சீனாவில் கடந்த சில வாரங்களாகப் 'பாரா இன்ஃபுளுயன்சா' (HPIVs) எனப்படும் சுவாச வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாகச் சீன நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் (CDC) எச்சரித்துள்ளது.
சாதாரண சளியைப் போன்ற அறிகுறிகளைக் கொண்ட இந்த வைரஸ், குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் 4.7 விழுக்காடாக இருந்த இந்தத் தொற்று பாதிப்பு, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் 6.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. சாதாரணக் காய்ச்சல் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், இந்த வைரஸ், ஆர்.எஸ்.வி (RSV) போன்ற இதர சுவாச நோய்த்தொற்றுகளின் பரவல் மட்டும் சீனாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
இன்ஃபுளுயன்சா காய்ச்சலை விட இந்த வைரஸ் மிக எளிதாகக் குழந்தைகளுக்குப் பரவக்கூடியது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நெருங்கிய தொடர்புகள் மூலம் பரவக்கூடிய இந்தத் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், காற்றோட்டமான சூழலில் இருத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 12:50 pm
பிரசவ அறையாக மாறிய நீதிமன்றம்: மகிழ்ச்சியும் சோகமும் நிறைந்த நீதிமன்ற பிரசவம்
May 19, 2026, 10:40 am
காங்கோவில் இபோலோ தொற்றினால் 91 பேர் மாண்டனர்: அமெரிக்க விமான நிலையங்களில் கடும் பரிசோதனை
May 18, 2026, 7:26 pm
ராயல் கிங்க்ஸ் குழுமத் தலைவர் சிராஜுத்தீனுக்கு கலைச் செம்மல் விருது
May 14, 2026, 3:57 pm
பிரிட்டிஷ் சொகுசுக் கப்பலில் புதிதாக இப்போது நொரோவைரஸ்
May 12, 2026, 6:15 pm
