செய்திகள் உலகம்
ஹார்முஸில் ஈரான் கப்பலை கைப்பற்றிய ‘யுஎஸ் மரைன்ஸ்’: பதிலடிக்கு தயாராகும் தெஹ்ரான்
தெஹ்ரான்:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், "ஈரானியக் கொடி ஏந்திய 'தூஸ்கா' (TOUSKA) என்னும் சுமார் 900 அடி நீளமும், ஒரு விமானம் தாங்கிப் போர்க்கப்பலுக்கு நிகரான எடையும் கொண்ட சரக்குக் கப்பல் எங்களது கடற்படை முற்றுகையைத் தாண்டிச் செல்லமுயன்றது.
ஆனால் அது அவர்களுக்குச் சாதகமாக அமையவில்லை. ஓமன் வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பலான 'யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ்' (USS SPRUANCE), தூஸ்கா கப்பலை வழிமறித்து, நிறுத்தி உள்ளது.
ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட்டுள்ள அமெரிக்காவின் மிக முக்கியப் படைப்பிரிவான் யுஎஸ் மரைன்ஸ், அந்த வழியாகச் சென்ற ஈரான் கொடி பறந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 4:03 pm
அமெரிக்க போர்க் கப்பல் மலாக்கா நீரிணை வழியாகச் சென்றது
April 20, 2026, 10:38 am
புளோரிடாவில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்
April 20, 2026, 10:21 am
போரின் விளைவு: வான்வழித் தாக்குதலால் முடங்கிய 20 விமானங்கள்
April 19, 2026, 6:57 pm
கியூபாவை கைப்பற்ற போவதாக டிரம்ப் மிரட்டல் பேச்சு: மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின் கடும் கண்டனம்
April 19, 2026, 10:12 am
குவிந்து கிடந்த பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள்: குற்றச் செயல்களின் கூடாரமாகிறதா திரினிடாட்?
April 18, 2026, 2:16 pm
சர்வதேச அரங்கில் தீவிரமாக செயல்படும் பிரபோவோ சுபியாண்டோ
April 18, 2026, 11:42 am
