செய்திகள் மலேசியா
வலைதளத்தில் பாலியல் ஆசை காட்டி மோசடி: RM27,580 ரிங்கிட்டைப் பறிகொடுத்த பொறியாளர்
கோலாலம்பூர்:
இணையம் வாயிலாகப் பாலியல் சேவை வழங்குவதாகக் கூறி நடத்தப்பட்ட மோசடியில் சிக்கி, 28 வயதுடைய பொறியாளர் ஒருவர் RM27,580 மலேசிய ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி பங்சாரில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது, 'டிக்டாக்' (TikTok) செயலியில் வந்த ஒரு இணைப்பைத் தொடர்பு கொண்டதில் இந்த மோசடி அரங்கேறியுள்ளது.
அந்தப் பொறியாளர் இணைய இணைப்பின் மூலம் 'வாட்ஸ்அப்' (WhatsApp) வழியாகப் பாலியல் சேவையைப் பெறப் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு காரணங்களைக் கூறி அவரிடமிருந்து பணம் கோரப்பட்டுள்ளது.
இதனை நம்பிய அவர், ஆறு வெவ்வேறு வங்கிச் கணக்குகளுக்கு 22 முறைகளாக மொத்தம் RM27,580 மலேசிய ரிங்கிட்டை அனுப்பியுள்ளார்.
அதன் பின்னரும் கூடுதல் பணம் கேட்கப்பட்டதால் சந்தேகமடைந்த அவர், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், முன்பதிவை ரத்து செய்யக் கட்டணம் வசூலிப்பதும், பணம் தர மறுத்தால் பாதிக்கப்பட்டவரின் விவரங்களைச் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டுவதும் இந்த மோசடிக் கும்பலின் பாணி எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துப் பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறை துணை ஆணையர் ஹூ சாங் ஹூக் கூறுகையில், சமீபகாலமாக இத்தகைய மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், இது குறித்துக் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
