செய்திகள் மலேசியா
நாளை முதல் ரோன் 97 பெட்ரோல் 5 சென்னும் ரோன் 95 பெட்ரோல் 10 சென்னும் உயரும்: நிதியமைச்சு
புத்ராஜெயா:
நாடு முழுவதும் நாளை முதல் ரோன் 97 பெட்ரோல் விலை 5 சென் உயரும்.
அதே நேரத்தில் மானியம் இல்லாத ரோன் 95 பெட்ரோல் விலை 10 சென் உயரும்.
தற்போது ஒரு லிட்டர் 4.85 ரிங்கிட்டாக உள்ள ரோன் 97 பெட்ரோல் விலை, இனி ஒரு லிட்டர் 4.90 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படும் என்று நிதியமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மானியம் இல்லாத ரோன் 95 பெட்ரோல் விலை, தற்போது ஒரு லிட்டர் 3.87 ரிங்கிட்டாக இருந்து, இனி ஒரு லிட்டர் 3.97 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படும்.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 5.12 ரிங்கிட்டாக நீடிக்கிறது.
பூடி 95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரோன் 95 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற விலையிலும்,
சபா, சரவா, லாபுவானில் டீசல் ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற விலையிலும் நீடிக்கும்.
இந்த விலைகள் மே 6 வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 8:09 pm
அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்கள் விவகாரம் முழுமையாக ஆய்வு, கணக்கெடுப்புகள் தேவை: குணராஜ்
April 29, 2026, 8:07 pm
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: அமினுடின்
April 29, 2026, 5:29 pm
வறட்சியின் பிடியில் கோலோக் ஆறு: கிளாந்தானில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைவு
April 29, 2026, 5:19 pm
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: அமினுடின்
April 29, 2026, 5:04 pm
5 மாநிலங்களில் கைவரிசை காட்டிய 'லோன் ஷார்க்' கும்பல்: ஜொகூர் போலிசாரால் அதிரடியாக கைது
April 29, 2026, 4:46 pm
உறவினர்களிடமே கைவரிசையைக் காட்டிய ஆடவர்
April 29, 2026, 4:07 pm
நாட்டில் O, A ரத்த வகைகளின் விநியோகம் குறைந்து வருகிறது
April 29, 2026, 3:38 pm
