நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் ஆளுநரை பதவியில் இருந்து அகற்றுவதற்கான பிரகடனம் அங்கீகரிக்கப்படவில்லை: மந்திரி புசார்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் ஆளுநரை பதவியில் இருந்து அகற்றுவதற்கான பிரகடனம் அங்கீகரிக்கப்படவில்லை.

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் இதனை கூறினார்.

நேற்று சுங்கை உஜோங் உண்டாங் லுவாக் மண்டபத்தில் நெகிரி செம்பிலான் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஆளுநர் பதவி நீக்கம் செய்யும் பிரகடனத்தில் கையெழுத்திட்டு வாசித்த டத்தோ முபாரக் தோஹாக்கின் செயலை ஏற்கவோ அங்கீகரிக்கவோ முடியாது.

ஏனெனில் முபாரக்கிற்கு இனி சுங்கே உஜோங்கின் உண்டாங் லுவாக்காக அழைக்கும் அதிகாரமும் செயல்பாடும் இல்லை.

முபாரக் தோஹாக் ஏற்கனவே ஷரியா சட்டத்தையும் பாரம்பரிய வழக்கங்களையும்  மீறியதற்காகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதை மந்திரிபெசார் சுட்டிக்காட்டினார்.

மேலும் இது நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் 1959இன் 10 முதல் 12 வரையிலான பிரிவுகளுக்கு முரணாக உள்ளது.

தெலகா உண்டாங் (Telaga Undang) ஷரீபா நோர் சைதா அல்-கத்ரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முபாரக் தோஹாக் பழக்கவழக்கங்கள் (Adat) அல்லது அரசியலமைப்பு சட்டத்தின்படி தற்போது எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

முபாரக் தோஹாக் கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி ‘டத்தோ கிளானா பெத்ரா’ என்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டார். எனவே, அவருக்கு மன்னரை நீக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

“முபாரக் தோஹாக்கின் இந்த நடவடிக்கை மன்னர் துங்கு முஹ்ரிஸுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகமாகும் (Treason). அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என ஷரீபா நோர் சைதா வலியுறுத்தினார்.

இச்செயலுக்கு ‘இபு சோக்கோ’ (Ibu Soko) அல்லது ‘அனக் வாரிஸ்’ (Anak Waris) ஆகிய பாரம்பரிய அமைப்புகள் எந்த அனுமதியோ அல்லது அதிகாரமோ வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற நீதி, சட்ட மன்றக் (Dewan Keadilan dan Undang) கூட்டத்திலும் அவர் தனது பதவி நீக்கத்தை ஏற்று அமைதி காக்கும்படி அறிவுறுத்தப்பட்டார். இந்நிலையில், அவர் தன்னிச்சையாக மன்னருக்கு எதிராகப் பிரகடனம் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset