செய்திகள் மலேசியா
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகளை பிரதமர் நாளை அறிவிப்பார்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கோடிக் காட்டினார்.
நாளை மே 1ஆம் தேதி உலகளாவிய நிலையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படவுள்ளது.
மலேசியாவின் தேசியத் தொழிலாளர் தின விழா புக்கிட் ஜாலில் யூனிஃபை அரங்கில் நாளை நடைபெறவுள்ளது.
காலை 7 மணிக்கும் தொடங்கும் இவ்விழாற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்கவுள்ளார்.
இவ்விழாவில் தலைமை உரையாற்றவிருக்கும் பிரதமர்,
மலேசியர்களுக்காக குறிப்பாக தொழிலாளர்களுக்காக பல நல்ல செய்திகளை அறிவிப்பார்.
அது தொடர்பான விவரங்களை என்னால் இங்கு கூற முடியாது.
ஆனால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் அறிவிப்புகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும்.
ஆக நாம் அனைவரும் பிரதமரின் உரைக்காக காத்திருப்போம் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
வாய்க்காலில் விழுந்து காணாமல் போன சிறுவன் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
April 30, 2026, 4:41 pm
