செய்திகள் மலேசியா
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் கெசுமா ஒத்துழைப்பை வலுப்படுத்தும்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் கெசுமா ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில், மனிதவள அமைச்சு பல்வேறு முயற்சி, நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தொழிலாளர்களின் நலன்களை தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் முதன்மை இலக்காகும்.
மேலும் இந்த உலகளாவிய நெருக்கடிச் சூழலில் தேசியப் பொருளாதாரம் மீள்திறன் கொண்டதாகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் தான் மாநில ரீதியில் மனிதவள துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் இன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
முதலாளிகளின் இயக்கச் செலவுகள், மக்களின் வாழ்க்கைச் செலவு, வேலைச் சந்தையின் நிலப்பரப்பை மாற்றியமைத்துள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
நாட்டின் தொழிலாளர்கள் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, எந்தவொரு பொருளாதார அதிர்ச்சிகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க ஒரு வலுவான சமூகப் பாதுகாப்பு வலையை உருவாக்கப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் மனிதவள அமைச்சு, மாநில அரசாங்கங்களுடன் இணைந்து இது தொடர்பான திட்டங்களை முன்னெடுக்கும்.
குறிப்பாக மனிதவள அமைச்சின் திட்டங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஆட்சி குழு உறுப்பினர்கள், அமைச்சர்களின் அலுவலகத்திற்கு நேரடியாக தெரிவிக்கப்படும்.
இதன் மூலம் இந்தத் திட்டங்கள் மாநில அரசாங்கங்களை சென்றடையும் என்று டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
வாய்க்காலில் விழுந்து காணாமல் போன சிறுவன் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
April 30, 2026, 4:41 pm
