நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்

தங்காக்:

கடந்த மாதம் புக்கிட் கங்காரில் உள்ள ஒரு உணவகத்தின் முன், பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபர்களாக நம்பப்படும் மூன்று ஆண்கள், மலாக்காவைச் சுற்றியுள்ள பல ஹோட்டல்களில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டு நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர். 

 ஆணின் கொலை வழக்கில் தேடப்பட்ட மூன்று சந்தேக நபர்கள், நேற்று முன்தினம் மாலை 7 மணி முதல் 7.45 மணிக்குள் கைது செய்யப்பட்டனர் என்று தங்காக் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் ரோஸ்லான் முஹம்மத் தாலிப் தெரிவித்தார். 

"24 வயதுடைய சந்தேக நபருக்கு ஏழு முந்தைய குற்றப்பதிவுகள், 26 வயதுடைய சந்தேக நபருக்கு ஐந்து, 32 வயதுடைய சந்தேக நபருக்கு ஆறு முந்தைய குற்றப்பதிவுகள் உள்ளன.

"பொதுமக்களின் தகவலின் பேரில், போலிஸார் மலாக்கா ராயா, பண்டார் ஹிலிர் ஆகிய மூன்று வெவ்வேறு ஹோட்டல் இடங்களில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்தனர். 

"கைது செய்யப்பட்டபோது, சந்தேக நபர்கள் தங்கள் அறைகளில் ஓய்வெடுத்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும் இருந்தனர். போலிஸாரின் வருகையை உணர்ந்ததும், அவர்கள் தப்பிக்க முயன்று தோல்வியடைந்தனர்," என்று இன்று தங்காக் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற வழக்குப் பொருட்களை அகற்றும் நிகழ்வுக்குப் பின்னர் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் கூறினார்.

இந்த வழக்கில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், இன்னும் தலைமறைவாக உள்ள இரண்டு சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் போலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று, மூன்று சந்தேக நபர்களும், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில், ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அந்தச் சம்பவத்தில், 38 வயதுடைய பாதிக்கப்பட்டவர் டோங் வெய் ஷெங், கை, கால், முதுகில் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனை வந்ததும் இறந்தார்.

ஒரு உணவுக் கடைக்கு அருகில் மூன்று ஆண்களால் துரத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாரங்க்களை ஆயுதங்களாகக் கொண்ட மூன்று ஆண்களால் பாதிக்கப்பட்டவர் வெட்டப்பட்டார். அதன் பின்னர், அவர் புக்கிட் கங்காரின் பத்து 9-ல் உள்ள ஒரு வீட்டிற்குத் தப்பிச் சென்றார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset