செய்திகள் மலேசியா
சுங்கைபூலோ, கோத்தா டாமன்சாரா தொகுதியை தற்காப்பதுடன் பாயா ஜெராஸ் தொகுதியை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
அடுத்த பொதுத் தேர்தலில் சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதி, கோத்தா டாமன்சாரா சட்டமன்ற தொகுதியை கெஅடிலான் தற்காக்கும்.
அதே வேளையில் பாயா ஜெராஸ் சட்டமன்ற தொகுதியை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
சுங்கை பூலோ கெஅடிலான் தொகுதியின் ஆண்டுப் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அத்தொகுதி தலைவரும் சுங்கைப்பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் இக்கூட்டத்திற்கு தலைமையேற்று பேசினார்.
நமது கடமைகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமல்லாமல் சுங்கைபூலோ கெஅடிலான் தொகுதியின் திசை, வலிமையை வலுப்படுத்துவதற்காக இக்கூட்டம் நடைபெறுகிறது.
கெஅடிலான் சுங்கை பூலோ தொகுதியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, தொகுதியின் நிலைத்தன்மையையும் வலிமையையும் பராமரிப்பதை உறுதி செய்வதே நமது முன்னுரிமையாக உள்ளது.
மேலும் நாம் அனைவரும் ஒழுங்கமைக்கப்பட்ட அணியாக நின்று, வரவிருக்கும் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
குறிப்பாக கெஅடிலான் சுங்கை பூலோ தொகுதி, சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியையும் பாதுகாக்கும்.
மேலும் கோத்தா டாமன்சாரா சட்டமன்றத் தொகுதியை தக்கவைக்கும்.
குறிப்பாக பாயா ஜெராஸ் சட்டமன்றத் தொகுதியை மீட்டடப்பதற்கான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கும் உறுதி கொண்டுள்ளது.
இது வெறும் அரசியல் இலக்கு மட்டுமல்ல, மக்கள் தொடர்ந்து அதிகாரம் பெறுவதற்கான போராட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதில் இது ஒரு பெரும் பொறுப்பாகும்.
தேசிய சீர்திருத்தத் திட்டத்தைக் கொண்டு வருவதில் கொள்கை உறுதியையும் அசைக்க முடியாத நிலைத்தன்மையையும் வெளிப்படுத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையின் வழியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதில் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நமது வலிமையைக் குறைக்கக்கூடிய எந்தப் பிளவுகளையும் தவிர்க்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
வாய்க்காலில் விழுந்து காணாமல் போன சிறுவன் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
April 30, 2026, 4:41 pm
