நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலோக் கடற்கரையில் பரபரப்பு: மணல் திட்டில் சிக்கிய இளம்பெண் மீட்பு

குவாந்தான்: 

பாலோக் கடற்கரையில் நேற்று காலை மணல் திட்டில் சிக்கித் தவித்த 24 வயது இளம்பெண் ஒருவரைத் தீயணைப்பு, மீட்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். 

கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள மணல் திட்டுப் பகுதிக்கு அந்தப் பெண் சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக கடல் நீர் மட்டம் உயரத் தொடங்கியதால் அவர் கரைக்குத் திரும்ப முடியாமல் அங்கே சிக்கிக்கொண்டார்.

நேற்று காலை 8.37 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, கெபெங் (Gebeng) தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

சுமார் ஒரு மீட்டர் ஆழத்திற்கு நீர் உயர்ந்திருந்த நிலையில், ரப்பர் படகைப் பயன்படுத்தி அந்த இளம்பெண்ணை அதிகாரிகள் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.

கடல் நீர் மட்டம் நேரங்களில் மணல் திட்டுப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பஹாங் மாநிலத் தீயணைப்புத் துறை துணை இயக்குநர் முஹம்மத் சலாவுதீன் ஈசா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

நீர் வற்றும் போது பாதுகாப்பாகத் தெரியும் மணல் திட்டுகள், நீர் மட்டம் உயரும்போது மிக வேகமாக மூழ்கக்கூடும் என்பதால், இத்தகைய ஆபத்தான இடங்களுக்குத் தனியாகச் செல்வதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset