செய்திகள் மலேசியா
மேற்கு ஆசிய மோதல்: கொள்கை சீர்திருத்தங்களைச் செயல்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல், உலகளாவிய சந்தையில் எரிசக்தி விலைகளை அதிகரித்துள்ளதுடன் மேலும் சில சந்தைகளில் இருந்து மூலதனம் வெளியேறுவதற்கு காரணமாகியுள்ளது.
புவிசார் அரசியல் தற்போது விநியோகச் சங்கிலி முடிவுகளை மறுவடிவமைத்து வரும் ஒரு கட்டத்தில் உலகம் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார். இதில் செலவுகள் அல்லது பொறியியல் திறன்களுக்கான தாக்கங்களும் அடங்கும் என்றார் அவர்.
இருப்பினும், சமீபத்திய வாரங்களில், உலகளாவிய நிதிகள் AS$2 பில்லியனுக்கும் அதிகமான மலேசிய பத்திரங்களை வாங்கியதாக அவர் கூறினார். இது பத்து மாதங்களில் அதிகபட்ச உள்நாட்டு முதலீடாகக் கருதப்படுகின்றது.
"ரிங்கிட், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஆசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாகும். நமது பொருளாதாரம் கடந்த ஆண்டு 5.2 சதவீதம் வளர்ந்துள்ளது.
"உற்பத்தி, செமிகாண்டெக்ட்டர்கள், விண்வெளித் துறைகளால் உந்தப்பட்டு, மலேசியா பதிவு செய்யப்பட்ட முதலீட்டு அளவுகளை ஈர்த்துள்ளது.
"இவை அனைத்தும் முயற்சி இல்லாமல் நிகழவில்லை. கொள்கை சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதிலும், தங்கள் முதலீட்டு, உற்பத்தி நடவடிக்கைகளுக்கான இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் பல விருப்பங்களைக் கொண்ட நிறுவனங்கள், நிதி மேலாளர்களுடன் நெருங்கிய ஈடுபாட்டைப் பேணுவதிலும் நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம். ஒழுக்கத்துடன் இந்த முயற்சிகள் தொடரும்" என்றார் அவர்.
இன்று மைடேக்கில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு சேவைகள் கண்காட்சி, ஆசிய தேசிய பாதுகாப்பு கண்காட்சி 2026-இன் தொடக்க உரையை வழங்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
வாய்க்காலில் விழுந்து காணாமல் போன சிறுவன் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
April 30, 2026, 4:41 pm
