செய்திகள் உலகம்
காசாவில் நீடிக்கும் போர் பதற்றம்: அமெரிக்கா - ஹமாஸ் பேச்சுவார்த்தை தோல்வி
இஸ்தான்புல்:
காசா முனையில் இரண்டாம் கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்காக, எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் அமைப்புக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி நிறைவடைந்தது.
கடந்த 2025 அக்டோபர் மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், எகிப்து அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விவாதத்தில், முக்கிய நிபந்தனைகளில் இரு தரப்பிற்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளே தோல்விக்குக் காரணமாக அமைந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல் கட்ட உடன்படிக்கையில் குறிப்பிட்டபடி, இஸ்ரேல் தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியது.
இருப்பினும், சமர்ப்பிக்கப்பட்ட புதிய முன்மொழிவுகள் பாலஸ்தீன மக்களின் நலன்களையும் மனிதாபிமானத் தேவைகளையும் புறக்கணிப்பதாகவும், இஸ்ரேலின் கோரிக்கைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் பாலஸ்தீனத் தரப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், இஸ்ரேல் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாகப் பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த அத்துமீறல்களால் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, உதவிப் பொருட்கள் கொண்டு செல்வதிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, காயமடைந்த ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேல் பின்வாங்கவில்லை என்பதும் பேச்சுவார்த்தையில் பெரும் தடையாக உள்ளது.
இறுதியாக, மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு முன்பே ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற இஸ்ரேலின் நிபந்தனையை ஹமாஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
முதல் கட்ட உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சாத்தியம் என பாலஸ்தீன அமைப்புகள் அறிவித்துள்ளன.
இதனால் காசா பகுதியில் அமைதி திரும்புவதில் மீண்டும் சிக்கல் நீடிக்கிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 12:50 pm
பிரசவ அறையாக மாறிய நீதிமன்றம்: மகிழ்ச்சியும் சோகமும் நிறைந்த நீதிமன்ற பிரசவம்
May 19, 2026, 10:40 am
காங்கோவில் இபோலோ தொற்றினால் 91 பேர் மாண்டனர்: அமெரிக்க விமான நிலையங்களில் கடும் பரிசோதனை
May 18, 2026, 7:26 pm
ராயல் கிங்க்ஸ் குழுமத் தலைவர் சிராஜுத்தீனுக்கு கலைச் செம்மல் விருது
May 14, 2026, 3:57 pm
பிரிட்டிஷ் சொகுசுக் கப்பலில் புதிதாக இப்போது நொரோவைரஸ்
May 12, 2026, 6:15 pm
