நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போலந்து தலைநகரில் ஒரு புதிய சூப்பர் ஹீரோ: காட்டுப்பன்றிகளை விரட்டியடிக்கும் ரோபோ

வார்சா: 

போலந்து நாட்டின் தலைநகரான வார்சாவில், 'எட்வர்ட் வார்ச்சோக்கி' என்று அழைக்கப்படும் 'யூனிட்ரீ ஜி1' (Unitree G1) வகை ரோபோ ஒன்று, குடியிருப்பு பகுதிகளில் ஊடுருவிய காட்டுப்பன்றிகளை அதிவேகமாக விரட்டியடிக்கும் காட்சிகள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

நீண்டகாலமாகக் காட்டுப்பன்றிகளின் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அந்த நகரத்திற்கு, இந்த ரோபோ ஒரு புதிய 'பாதுகாவலனாக' உருவெடுத்துள்ளது.

இந்த ரோபோ சுமார் 25 கிலோ எடை கொண்டுள்ளதால் மனிதர்களைப் போலவே மிக இலகுவாகவும் வேகமாகவும் இயங்கும் திறன் கொண்டது. குறிப்பாக, இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI), குரல், உருவங்களை அடையாளம் கண்டு செயல்பட உதவுகிறது. 

வேகமான ஓட்டத்திற்காக வடிவமைக்கப்படாவிட்டாலும், இந்தப் பன்றிகளை விரட்டுவதில் அது காட்டிய வேகம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் காணொலியைக் கண்ட சமூக வலைதளப் பயனாளர்கள், ரோபோவின் செயலைப் பாராட்டி வருகின்றனர். "இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு; எனது தோட்டத்திலுள்ள பன்றிகளை விரட்டவும் இத்தகைய ரோபோவை வாடகைக்கு எடுக்கத் தயார்" என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். 

மேலும் சிலர், பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களிலும் பாதுகாப்புப் பணிகளுக்காக இத்தகைய ரோபோக்களைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு யூனிட்ரீ ரோபாட்டிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த வகை ரோபோக்கள், சுழலும் திறன், தற்காப்புத் திறன்களையும் கொண்டுள்ளன. 

விலங்குகள் அல்லது மனிதர்களால் தாக்கப்படும்போது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இல்லாததால், ஆபத்தான சூழல்களில் ரோபோக்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset