நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தில் உலகின் மிகப் பெரிய தண்ணீர் திருவிழாவின்போது 3 நாளில் விபத்தில் சிக்கி 191 பேர் உயிரிழப்பு

பேங்காக்:

தாய்​லாந்​தில் நடை​பெற்று வரும் தண்ணீர் திருவிழா​வின்​போது சாலை விபத்​துகளில் சிக்கி கடந்த 3 நாளில் 191 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

தாய்​லாந்து நாட்டு மக்​களின் புத்​தாண்டு சோங்க்ரான் என்று அழைக்​கப்​படு​கிறது. தாய் தேசிய புத்​தாண்டு ஆண்​டு​தோறும் ஏப்​ரல் 9-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது.

சோங்க்​ரான் மத சடங்​கு​கள், பாரம்​பரிய நடனங்​கள், இசை, விருந்​துகளு​டன் கொண்​டாடப்​படு​கின்​றன. சோங்க்​ரான் நீர் திரு​விழா​வின்போது, பழையன கழித்​து விட்​டு, புதி​யதை வரவேற்​கும் அடை​யாள​மாக மக்​கள் ஒருவர் மீது ஒரு​வர் தண்​ணீரைத் தெளித்​துக் கொள்கிறார்கள். 

191 killed in traffic accidents during five days of Songkran in Thailand -  VnExpress International

இந்​நிலை​யில் இந்​தத் திரு​விழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. நாடு முழு​வதும் பல்​வேறு இடங்​களில் இந்தத் தண்​ணீர் திரு​விழா கடந்த 4 நாட்​களாக நடைபெற்று வரு​கிறது. 

இந்த விழா​வில் பங்​கேற்க வரும்​போது 3 நாளில் சுமார் 951 சாலை விபத்​துகள் நடந்​துள்​ளன. இதில் 191 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் 911 பேர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்​றனர்.

​​​​​- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset