நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்”: ட்ரம்ப்

வாஷிங்டன்:

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் நான் பாகிஸ்தான் செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஃபிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி அமெரிக்காவும், ஈரானும் இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தன.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் கூறியதாவது: ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் அங்கு செல்லக்கூடும். 

​​​​​- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset