செய்திகள் உலகம்
தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த ஓநாய் மீட்புப் பணி முடிவுக்கு வந்தது
டேஜியோன்:
தென் கொரியாவின் டேஜியோன் நகர உயிரியல் பூங்காவிலிருந்து தப்பிச் சென்று ஒன்பது நாட்களாகத் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய 'நியூகு' (Neukgu) என்ற இரண்டு வயது ஓநாய், வெள்ளிக்கிழமை அதிகாலை 12.44 மணியளவில் பத்திரமாகப் பிடிபட்டது.
தப்பிச் சென்ற இடத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலைப் பகுதியில் வைத்து மீட்கப்பட்ட அந்த ஓநாயின் உடல்நிலை, இதயத் துடிப்பு சீராக இருப்பதாக மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேடுதல் வேட்டையில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பலமுறை பிடிபடும் நிலையில் இருந்தும் நழுவிச் சென்ற நியூகு, மலைப்பகுதிகளிலும் சாலைகளிலும் ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
கடந்த 2024-இல் பிறந்த இந்த ஓநாய், கொரிய ஓநாய் இனங்களை மீண்டும் பெருக்குவதற்கான திட்டத்தின் ஒரு அங்கமாகும். காடுகளில் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் இந்த இனம் பூங்காவிலிருந்து தப்பியதால், அதன் பாதுகாப்பு குறித்துப் பலரும் கவலை அடைந்தனர்.
முன்னதாக, 2018-ஆம் ஆண்டு இதே பூங்காவிலிருந்து தப்பிய 'பொரோங்கி' என்ற பூமா (Puma) சுட்டுக் கொல்லப்பட்ட கசப்பான சம்பவத்தை நினைவு கூர்ந்த விலங்கு நல ஆர்வலர்கள், நியூகு உயிருடன் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் கூட இந்த ஓநாய் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டும் எனப் பகிரங்கமாகப் பிரார்த்தித்தார்.
வியாழன் இரவு அன்யோங்-டாங் பகுதியில் கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இறுதி கட்டத் தேடுதல் வேட்டையில், சோர்வடைந்த நிலையில் இருந்த நியூகு இறுதியாகப் பிடிபட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 1:01 pm
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் சண்டைநிறுத்தம்: டிரம்ப் அறிவித்தார்
April 17, 2026, 11:57 am
தொடர்பு துண்டிக்கப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி: பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
April 17, 2026, 11:30 am
இஸ்ரேல் மீது 56 ராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு
April 17, 2026, 10:11 am
போலந்து தலைநகரில் ஒரு புதிய சூப்பர் ஹீரோ: காட்டுப்பன்றிகளை விரட்டியடிக்கும் ரோபோ
April 16, 2026, 3:48 pm
தப்பிக்க வழியின்றித் தவிக்கும் மக்கள்: போரினால் சிதைந்த சிரியாவிற்குத் திரும்பும் அகதிகள்
April 16, 2026, 10:21 am
துருக்கியில் 14 வயது பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனா்
April 16, 2026, 10:08 am
