நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தொடர்பு துண்டிக்கப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி: பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா: 

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாகாணத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததை மீட்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களுக்கு இடையே சிலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மீட்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நூர்ராச்மன் கிந்தா த்ராதிஸ்யா தெரிவித்தார்.

நேற்று காலை 7.34 மணியளவில் மெலாவியிலிருந்து, குபு ராயா நோக்கிப் புறப்பட்ட 'PK-CFX' ரக ஹெலிகாப்டர், காலை 8.10 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டது. 

ற்று தொடங்கப்பட்ட மீட்புப் பணிகள் இன்று காலையும் நீடித்த நிலையில், சிதைந்த ஹெலிகாப்டர் பாகங்களுக்குள் சிக்கியிருந்த உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியேற்றும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தேடுதல், மீட்புப் பணியில் (SAR) சுமார் 20 மீட்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக இந்தோனேசிய விமானப்படையின் ஹெலிகாப்டரும் களமிறக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset