செய்திகள் உலகம்
“யுரேனியத்தை ஒப்படைக்க முடியாது”: அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஈரான் கடும் பதிலடி
தெஹ்ரான்:
ஈரானின் யுரேனியம் கையிருப்பை வேறு நாடுகளுக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரானின் யுரேனியத்தை ஒப்படைக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில், ஈரான் அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பகாய் கூறுகையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எங்கும் மாற்றும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இத்தகைய கோரிக்கைகள் ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.
அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள் மூலம் தாக்கப்பட்ட இடங்களில் உள்ள அணுசக்தி துகள்களை அமெரிக்கா மீட்கும் என்று டிரம்ப் பதிவிட்டிருந்த கருத்துக்குப் பதிலடியாக இது அமைந்துள்ளது.
தற்போதைய பேச்சுவார்த்தைகள் அணுசக்தி விவகாரத்தை விட, போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாக பகாய் தெரிவித்தார்.
குறிப்பாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான 10 அம்சத் திட்டம், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈடுசெய்வது போன்ற கோரிக்கைகளே முன்னிலையில் உள்ளன.
அதே வேளையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்திருந்தாலும், அமைதி உடன்படிக்கை ஏற்படும் வரை கடல்சார் தடைகள் தொடரும் என்ற டிரம்பின் எச்சரிக்கையையும் ஈரான் சாடியுள்ளது.
ஜலசந்தியின் செயல்பாடுகளை இணையத்தில் தீர்மானிக்க முடியாது என்றும், எதிரிகளின் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்ள ஈரான் இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 12:50 pm
பிரசவ அறையாக மாறிய நீதிமன்றம்: மகிழ்ச்சியும் சோகமும் நிறைந்த நீதிமன்ற பிரசவம்
May 19, 2026, 10:40 am
காங்கோவில் இபோலோ தொற்றினால் 91 பேர் மாண்டனர்: அமெரிக்க விமான நிலையங்களில் கடும் பரிசோதனை
May 18, 2026, 7:26 pm
ராயல் கிங்க்ஸ் குழுமத் தலைவர் சிராஜுத்தீனுக்கு கலைச் செம்மல் விருது
May 14, 2026, 3:57 pm
பிரிட்டிஷ் சொகுசுக் கப்பலில் புதிதாக இப்போது நொரோவைரஸ்
May 12, 2026, 6:15 pm
