நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிறையிலிருந்து விடுதலை: மியான்மர் முன்னாள் அதிபர் வின் மைண்டிற்கு பொது மன்னிப்பு

யாங்கூன்:

மியான்மரில் கடந்த 2021-ஆம் ஆண்டு இராணுவ புரட்சி ஏற்பட்டதிலிருந்து சிறை வைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் முன்னாள் அதிபர் வின் மைண்ட், வெள்ளிக்கிழமை அன்று பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார். 

அதே வேளையில், மியான்மரின் மக்களாட்சித் தலைவரும், நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூகியின் சிறைத் தண்டனையும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சுமார் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகிக்கு, இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் அறிவித்த பொது மன்னிப்பின் அடிப்படையில் தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளது. 

40 ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு ஆறில் ஒரு பங்கு தண்டனை குறைக்கப்படும் என்ற புதிய உத்தரவின் படி சூகிக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் தொடர்ந்து வீட்டுக் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபை, சூகி உட்பட அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

மியான்மரில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, ஜனநாயக ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினால் மட்டுமே அந்நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியும் என்று ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset