செய்திகள் மலேசியா
அம்னோவுக்கு திரும்பினார் கைரி ஜமாலுடின்
கோலாலம்பூர்:
முன்னாள் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினை அம்னோ மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இன்று நடைபெற்ற உயர்மட்ட செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஷர்காசி இதை உறுதிப்படுத்தினார்.
அம்னோவில் மீண்டும் இணைவதற்காக, கைரி கடந்த மார்ச் 16 அன்று தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியிடம் ஒரு மேல்முறையீட்டுக் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து அவரின் விண்ணப்பத்தை அம்னோ ஏற்றுக் கொண்டுள்ளது.
முன்னதாக முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன், முன்னாள் இளைஞர் பகுதி தலைவர் கைரி ஜமாலுடின், முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் சையத் ஹமீத் சையத் ஜாபர் அல்பார் ஆகியோரை அம்னோ மீண்டும் ஏற்று கொண்டுள்ளது.
இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்ற கூட்டத்தைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் அஷ்ராப் வாஜ்டி டுசுகி இந்த விஷயத்தை அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 5:32 pm
தெலுக் இந்தானில் பயங்கரம்: அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் முதியவரை வெட்டிக்கொலை
April 17, 2026, 5:07 pm
ஓஷன் தண்டர் கப்பல் இன்று பெங்கேராங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
April 17, 2026, 4:53 pm
விதிமுறைகளை மீறிய மணல் அகழ்வுப் பணி; நெகிரி செம்பிலான் மாநில அரசின் அதிரடி நடவடிக்கை
April 17, 2026, 4:51 pm
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த வேலையற்ற இளைஞர்: 2 மாத சிறைத்தண்டனை வழங்கிய கிள்ளான் நீதிமன்றம்
April 17, 2026, 4:27 pm
