செய்திகள் விளையாட்டு
அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்: ரசிகர்களின் உலகக் கிண்ணக் கனவு நனவாகுமா?
நியூயார்க்:
2026 FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஜூன் 11ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கவுள்ள போட்டிகளுக்குச் செல்வதில் ஏராளமான கால்பந்து ரசிகர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் புதிய விசா கட்டுப்பாடுகளால் பல நாடுகளிலிருந்து வருபவர்களுக்குச் சிரமம் அல்லது தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள அணிகளும் அடங்கும். அமெரிக்க நாடாளுமன்றம் நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு உலகக் கிண்ணத்துக்குத் தகுதி பெற்றுள்ள ஹெயிட்டி, ஈரான், செனகல், கோட் டி’வாயர் போன்ற நாடுகளையும் சேர்த்து மொத்தம் 39 நாடுகளுக்கான விசாவை நிறுத்தி வைத்துள்ளது.
இது ஹெயிட்டி கால்பந்து ரசிகர்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஹெயிட்டி உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் களமிறங்குகிறது.
பல ரசிகர்களுக்கு உலகக் கிண்ணத்தில் தங்கள் நாட்டைப் பிரதிநிதிக்கும் அணிக்கு ஆதரவு கொடுப்பது கால்பந்து விளையாட்டையும் தாண்டிய ஒன்று.
தங்கள் நாட்டு அணிக்கு ஆதரவளித்து மைதானத்தில் இருப்பது பெருமைக்கும், பெருமிதத்திற்கும் உரிய
ஓர் அடையாளம்.
ஆனால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பல சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன. போட்டிக்கான பயணம் தொடங்குவதற்கு முன்பே முடிந்துவிடுமோ என்ற அச்சம் கால்பந்து ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
