நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ண அரையிறுதியில் அஸ்டன்வில்லா

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு  அஸ்டன்வில்லா அணியினர் முன்னேறி உள்ளனர்.

வில்லா பார்க் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் பொலக்னா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்டன் வில்லா அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் பொலக்னா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அஸ்டன் வில்லா அணியின் வெற்றி கோல்களை ஒல்லி வாட்கின்ஸ், எமிலியானோ பியூண்டியா, மோர்கன் ரோஜர்ஸ், எஸ்ரி கொன்சா ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அஸ்டன் வில்லா அணியின் ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

நாட்டிங்காம் போரஸ் அணியினர் 2-1 என்ற மொத்த கோல் கணக்கில் போர்தோ எப்சி அணியை வீழ்த்தி அடுத்த சுற்றிக்கு முன்னேறினர்.

மற்ற ஆட்டங்களில் பிராய்பர்க், பிரகா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset