செய்திகள் விளையாட்டு
ஜீ யூ, உபர் கோப்பைப் போட்டியில் எம். தீனாவுடன் இணைந்து விளையாடுவார்
கோலாலம்பூர்:
டென்மார்க்கின் ஹார்சென்ஸில், ஏப்ரல் 24 முதல் மே 3 வரை நடைபெற இருந்த 2026 உபர் கோப்பைப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாட, இளம் வீராங்கனை சோங் ஜீ யூவை எம். தீனாவுடன் இணைத்து, மலேசிய பூப்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
தற்போது பேர்லி டான் சந்தித்து வரும் முதுகு பிரச்சனை காரணமாக, அவர் விலகிக் கொள்ள வேண்டியிருந்ததைத் தொடர்ந்தே இந்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பூப்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. அந்த மதிப்புமிக்க போட்டியின் தயாரிப்பின் ஒரு பகுதியாக, ஜீ யூ, டென்மார்க்கின் ஹெர்னிங்கில் நடைபெறும் தேசிய அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"பேர்லி இல்லாத நிலையிலும், நாட்டின் மகளிர் இரட்டையர் பிரிவின் வலிமையை தொடர்ந்து போட்டித்தன்மையுடன் வைத்திருப்பதை உறுதி செய்வதற்கான சிறந்த நடவடிக்கையாக ஜீ யூவின் தேர்வு கருதப்படுகிறது" என்று மலேசிய பூப்பந்து சங்கம் விளக்கியது.
போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில், தீனா-ஜீ யூ இணை, களத்தில் புரிதலை உருவாக்குவதில் ஒரு சவாலான பணியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தீனா கொண்டுள்ள அனுபவம், அந்த இளம் வீராங்கனை அழுத்தத்தைச் சமாளிக்க உதவும் என்று கருதப்படுகிறது.
ஜீ யூ முன்னர் வனேசா என்ஜியுடன் இணைந்து விளையாடினார். மேலும் தற்போது அவர்கள் உலகத் தரவரிசையில் 64வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
