நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஸ்பெயினின் ஐந்தாம் டிவிஷன் கிளப்பை லியோனல் மெஸ்ஸி வாங்கினார்

பார்சிலோனா:

அர்ஜெண்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயின் நாட்டின் ஐந்தாம் டிவிஷன் கிளப்பான கார்னெல்லாவின் புதிய உரிமையாளராகியுள்ளார். 

இது அவரது களத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

காடலோனியாவைத் தளமாகக் கொண்ட அந்தக் கிளப் ஓர் அறிக்கையில், 

இந்த கையகப்படுத்தல், பார்சிலோனாவுடனான மெஸ்ஸியின் நெருங்கிய உறவையும், உள்ளூர் திறமைகளை வளர்ப்பதில் அவரது அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது என்று கூறியுள்ளது.

தற்போது இந்தர்மியாமி அணிக்காக விளையாடும் மெஸ்ஸி, 2026 உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் அர்ஜெண்டினா அணியில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்னெல்லா இதற்கு முன்னர், அர்செனல் கோல்காவல்ர் டேவிட் ராயா, பார்சிலோனாவில் மெஸ்ஸியின் முன்னாள் சக வீரரான ஜோர்டி ஆல்பா உட்பட பல புகழ்பெற்ற வீரர்களை உருவாக்கியுள்ளது.

இருப்பினும், கடந்த இரண்டு சீசன்களில் தொடர்ச்சியாகத் தரமிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கிளப்பின் செயல்திறனில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset