செய்திகள் வணிகம்
600 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துடமைகள்; நாட்டிலேயே மிகப் பெரிய ஏல விழாவை எஹ்சான் குழுமம் நடத்துகிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
கோலாலம்பூர்:
நாட்டிலேயே மிகப் பெரிய ஏல விழாவை எஹ்சான் குழுமம் நடத்துகிறது.
எஹ்சான் வர்த்தக குழுமத்தின் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.
நாட்டில் முன்னணி சொத்துடமை ஏல நிறுவனமாக எஹ்சான் விளங்கி வருகிறது.
33 ஆண்டுகளாக இத் துறையில் எஹ்சான் ஈடுபட்டு சாதித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக எஹ்சான் வர்த்தகக் குழுமம் மாபெரும் சொத்துடமை ஏல விழாவை நடத்துகிறது.
கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட சொத்துடமைகள் இவ்விழாவில் ஏலத்திற்கு விடப்படுகிறது.
குறிப்பாக 10,000 ரிங்கிட் முதல் 6 மில்லியன் ரிங்கிட் வரையில் சொத்துடமைகள் இன்று ஏலம் விடப்படுகின்றன.
இந்த சொத்துடமைகளின் மொத்த மதிப்பு 600 மில்லியன் ரிங்கிட்டாகும் என்று அவர் கூறினார்.
வீடுகள், கடைகள் உட்பட சொத்துடமைகள் ஏலத்தில் வாங்குவதால் ஏதும் பிரச்சினை வருமா என்ற சந்தேகம் பலரிடம் இருக்கும்.
குறிப்பாக இந்திய சமுதாயத்திடையே பெரும் அச்சம் நிலவுகிறது.
ஆனால் ஏலத்தில் விடப்படும் சொத்துடமைகள் தரமானதாக இருக்கும். அச்சமடையத் தேவையில்லை.
அதே வேளையில் குறைந்த விலையில் இவ்வீடுகளை மக்கள் வாங்கி கொள்ளலாம்.
தற்போதைய சூழ்நிலையில் வீட்டின் விலை, அது அமைந்துள்ள இடம்தான் முக்கியம்.
ஆகவே மக்கள் தயங்காமல் ஏலத்தில் வரும் சொத்துகளை வாங்கலாம்.
சொத்துகளை ஏலத்தில் வாங்குவதற்கு மக்களுக்கு வழிகாட்ட எஹ்சான் எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
