செய்திகள் வணிகம்
தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா: 3000 கோடி பாட் வருமானம் ஈட்டி மெகா சாதனை
பேங்காக்:
தாய்லாந்தின் பாரம்பரிய புத்தாண்டான 'சொங்க்ரான்' திருவிழா, இந்த 2026-ஆம் ஆண்டில் அந்நாட்டின் சுற்றுலாத் துறைக்கு சுமார் 3,035 கோடி பாட் வருமானத்தை ஈட்டித் தரும் என்று தாய்லாந்து சுற்றுலா ஆணையம் (TAT) கணித்துள்ளது.
ஏப்ரல் 11 முதல் 15 வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டு, சர்வதேசப் பயணிகளின் வருகை எதிர்பார்த்ததை விட அனைத்துப் பிராந்தியங்களிலும் அதிகரித்துள்ளதாக ஆணையத்தின் ஆளுநர் தபானி கியாட்பைபூல் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டை விட ஆறு சதவீத வளர்ச்சியாகும்.
இந்த ஐந்து நாட்களில் சுமார் 5 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன் மூலம் 810 கோடி பாட் வருவாய் கிடைத்துள்ளது. அதேவேளையில், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பயணம் 59.6 லட்சமாகப் பதிவாகி, சுமார் 2,225 கோடி பாட் வருவாயைப் பெற்றுத் தந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பேங்காக்கின் சிலோம் சாலை, சியாம் சதுக்கம், காவ் சான் சாலை போன்ற முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதோடு, கலாச்சார நிகழ்வுகளும் வெகு விமரிசையாக நடைபெற்றன.
யுனெஸ்கோ (UNESCO) அங்கீகாரம் பெற்ற இந்த நீர் திருவிழா, தாய்லாந்தின் கலாச்சாரப் பெருமையை உலகுக்குக் பறைசாற்றுவதுடன், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதிகாரப்பூர்வக் கொண்டாட்டங்கள் ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்தாலும், குறிப்பிட்ட சில இடங்களில் கொண்டாட்டங்கள் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் துறை, உள்ளூர் சமூகங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடே இந்த மெகா வெற்றிக்குக் காரணம் எனத் தாய்லாந்து சுற்றுலா ஆணையம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
