நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா ஏமாற்றம்

மாட்ரிட்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறி பார்சிலோனா அணியினர் ஏமாற்றத்தை அளித்துள்ளனர்.

மெட்ரோ போலிடன் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை லெமானே யமால், பிரான் தோரஸ் ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் முடிவின் அடிப்படையில் பார்சிலோனா அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வி கண்டனர்.

இத்தோல்வியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் சாம்பியல் லீக் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர்.

அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset