செய்திகள் வணிகம்
உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே உலுக்கும் அதிரடி மாற்றம்: இனி ஜப்பான் அமெரிக்க டாலருக்கு பதிலாக சீன யுவானைப் பயபடுத்த முடிவு
உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே உலுக்கும் ஒரு அதிரடி மாற்றமாக, ஈரான் நாட்டு எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீன யுவானைப் (Chinese Yuan) பயன்படுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது.
இது "பெட்ரோ டாலர்" (Petrodollar) சிதைந்து, "பெட்ரோ யுவான்" (Petroyuan) சகாப்தம் தொடங்குவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த பல தசாப்தங்களாக, உலக நாடுகள் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்றால் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தது.
இதுவே அமெரிக்க டாலரை உலகின் முன்னணி கையிருப்பு நாணயமாக (Reserve Currency) மாற்றியது. அமெரிக்காவின் பொருளாதார செழிப்புக்கும் உலகளாவிய ஆதிக்கத்திற்கும் இதுவே முதுகெலும்பாக இருந்து வந்தது.அது பழைய கதை.
தற்போது ஜப்பான் எடுத்துள்ள இந்த முடிவு, அமெரிக்காவின் நிதி மேலாதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.
Bloomberg ஊடகத்தின் கட்டுரையாளர் Brooke Sample இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், பல தசாப்த கால உலகப் பொருளாதார நிலைமை (Status Quo) இந்த ஈரான் போரினால் உடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"அமெரிக்காவின் கடன் வாங்கும் செலவைக் குறைத்து, உலக இருப்பு நாணயமாக டாலரை வலுப்படுத்திய அந்த 'பெட்ரோ டாலர் சுழற்சி' (Petrodollar Loop) தற்போது முறிந்துவிட்டது."
— Bloomberg Opinion, ஏப்ரல் 11, 2026.
இதுதான் அந்த செய்தி.
அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் பாதுகாப்புத் திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜப்பானே இத்தகைய முடிவை எடுத்திருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஈரான் போரில் அமெரிக்கா சந்தித்த சூழல், அமெரிக்காவை இனி நம்ப முடியாது என்ற எண்ணத்தை ஜப்பானிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.
ஜப்பானைத் தொடர்ந்து தென் கொரியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் தைவான் போன்ற நாடுகளும் இதே பாதையைப் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே தென் கொரியா, ஈரான் நாட்டுடன் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு சிறப்புத் தூதரை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் அதிரடி மாற்றத்திற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
சீன யுவானில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் 'ஹார்முஸ்' (Strait of Hormuz) நீரிணையை எந்தவிதத் தடையுமின்றி கடக்க முடியும் எனத் தெரிகிறது. அவ்வாறான பயண பாதுகாப்பை ஜப்பான் விரும்புகிறது.
Bloomberg சுட்டிக்காட்டியபடி, பெட்ரோ டாலர் சுழற்சி உடைந்திருப்பது அமெரிக்காவின் கடன் வாங்கும் திறனைப் பாதிப்பதோடு, டாலரின் மதிப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இது அமெரிக்கா மீதான ஜப்பானின் நம்பிக்கையை சிதைத்துள்ளது.
அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும், தனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு (Energy Security) ஜப்பான் முன்னுரிமை ( Japan First) அளித்துள்ளது.
ஈரான் போரில் அமெரிக்கா அடைந்த பின்னடைவு, வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, அமெரிக்காவை இனி ஒரு 'நம்பகமான பாதுகாப்பு கூட்டாளி'யாக மட்டும் பார்க்காமல், தனது சுயநலன் சார்ந்து ஜப்பான் Hedging (reducing risk )செய்யத் தொடங்கியுள்ளது.
ஜப்பான் வெறும் சாதாரண நாடு அல்ல, அது G7 நாடுகளில் மிக முக்கியமான பணக்கார நாடு.
எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவின் 38 டிரில்லியன் டாலர் பொதுக் கடனில்,பெரும் பகுதியான 1.2 trillion ஐ (அதிகப்படியான கடன் பத்திரங்களை) ஜப்பானே வைத்துள்ளது.
ஜப்பான் தனது கைவசமுள்ள அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை (US Treasuries) சந்தையில் விற்கத் தொடங்கி, அதற்குப் பதிலாக சீன யுவானை தனது கையிருப்பாகச் சேமிக்க ஆரம்பித்தால், அது அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பேரிடியாக அமையும்.
ஜப்பான் போன்ற ஒரு மிகப்பெரிய முதலீட்டாளர் விலகினால், உலகச் சந்தையில் டாலரின் மதிப்பு நாம் எதிர்பார்ப்பதை விட மிக விரைவாகச் சரிந்து நொறுங்கக்கூடும்.
ஜப்பானின் இந்த "Japan First” கொள்கை, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் இந்த முடிவு உலக வரலாற்றில் ஒரு விசித்திரமான முரண்நகை (Irony).
இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் ஜப்பானை நிலைகுலையச் செய்தன. ஆனால் இன்று, ஜப்பான் ஏவியிருக்கும் "டாலர் நீக்கம்" (Dedollarisation) என்ற பொருளாதார அணுகுண்டு, ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரத்தையும் நிர்மூலமாக்கும் வலிமை கொண்டது என்பதில் சந்தேகமே இல்லை.
அன்று அமெரிக்கா ராணுவ ரீதியாக ஜப்பானைத் தாக்கியது, இன்று ஜப்பான் நிதி ரீதியாக அமெரிக்காவின் முதுகெலும்பைத் தகர்க்கத் தொடங்கியுள்ளது.
ஜப்பான் தனது கைவசமுள்ள டிரில்லியன் கணக்கான அமெரிக்கக் கடன் பத்திரங்களைச் சந்தையில் குவித்துவிட்டு, யுவானை நோக்கித் திரும்புவது என்பது வெறும் வர்த்தக மாற்றம் அல்ல, அது அமெரிக்காவின் உலகளாவிய நிதி ஆதிக்கத்திற்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி.
"Japan First " என்ற கொள்கையின் மூலம், Tokyo ஒரு தெளிவான செய்தியை உலகிற்குச் சொல்லியுள்ளது:
"இனி அமெரிக்கா உலகைக் காக்கும் காவலனும் அல்ல, Dollar உலகின் Reserve currency யும் அல்ல."
ஈரான் போரில் அமெரிக்கா கண்ட தோல்வியை விட, ஜப்பானின் இந்தத் துரோகம் (அமெரிக்காவின் பார்வையில்) அல்லது ராஜதந்திரம் (உலகின் பார்வையில்) அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்தும்.
Petrodollar என்னும் கோட்டை சரிந்துவிட்டது, இனி உலகப் பொருளாதாரம் ஒரு புதிய திசையை நோக்கிப் பயணிக்க தொடங்கும்.
- முனிந்தன் ராஜதுரைசிங்கம்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
