செய்திகள் மலேசியா
பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: ஜாலான் சுங்கை பெசி பகுதியில் அநாகரிகமாக நடந்துகொண்ட நபர் பிடிபட்டார்
கோலாலம்பூர்:
கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் ஒருவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இது தொடர்பான காணொலிகள் பரவி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் சசாலீ அடாம், சந்தேக நபர் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி ஜாலான் சுங்கை பெசி பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு முன்னால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
அந்த நபர் மீது இதுவரை ஆறு புகார்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, ஜாலான் புடு பகுதியில் உள்ள போக்குவரத்துச் சமிக்ஞை அருகே மோட்டார் சைக்கிளில் காத்திருந்த பெண்ணிடம் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படும் அந்த நபர், ஜாலான் டூட்டாவில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
முன்னதாக, தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து இந்த நபர் இழிவான செயல்களில் ஈடுபடுவதாகச் சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது போன்ற நபர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அந்த நபர் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 6:09 pm
சட்டவிரோத எல்லைக் கடப்பு: பள்ளிக்குச் செல்ல முற்பட்ட 34 மாணவர்கள் தடுத்து நிறுத்தம்
April 12, 2026, 2:10 pm
தேசிய முன்னணியா? தேசியக் கூட்டணியா?; மஇகா தலைமைத்துவம் நல்ல முடிவை எடுக்கும்: டத்தோ மோகன்
April 12, 2026, 12:18 pm
சமூக வலைதள நேரலையில் நேர்ந்த விபரீதம்: காரில் இருந்த பெண் மீது தாக்குதல்
April 12, 2026, 11:57 am
சுபாங்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண்; மனநல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
April 12, 2026, 11:42 am
