செய்திகள் சிந்தனைகள்
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி முறிந்தது
அமைதி என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது.
அமைதி நிலவும் என்ற நம்பிக்கையில் இருந்த உலக நாடுகளின் தலையில் இடி விழுந்தது போல ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி முறிந்திருப்பது, உலக நாடுகளை ஒரு பெரும் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.
மூடிய கதவுகளுக்குப் பின்னால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்த அந்த "இறுதி வாய்ப்பு" பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி சிதைந்து போயுள்ளது.
இது வெறும் ராஜதந்திரத் தோல்வி அல்ல; இது ஒரு மாபெரும் உலகப் போருக்கான அழைப்பு மணி!
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், மிகவும் கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் பாகிஸ்தான் மண்ணை விட்டு வெளியேறினார்.
"நாங்கள் நல்லெண்ணத்துடன் வந்தோம், ஆனால் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்கிற அடிப்படை உத்தரவாதத்தைக் கூட தர மறுக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
அதற்கு வாஷிங்டனின் கோரிக்கைகளை "சட்டவிரோதமானது" என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
“என்ன நடந்தாலும் வெற்றி நமக்கே" என வழமைபோல கிறுக்குத்தனமாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருப்பது, ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு இனி இடமில்லை என்பதையும், அமெரிக்கா ஒரு பெரும் ராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி வருவதையும் சூசகமாக உணர்த்துகிறது.
கடலில் நிலைமை மிக மோசமாக உள்ளது. அமெரிக்காவின் இரண்டு destroyer போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
ஆனால், அதனை "பச்சைப் பொய்" என்று மறுத்துள்ள ஈரான், "எங்கள் அனுமதியின்றி ஒரு சிறு கப்பல் கூட இந்தப் பகுதியைத் தாண்ட முடியாது; மீறினால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என ஈரான் தெரிவித்துள்ளது.
அதேவேளை Isfahan பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Mohsen Farkhani விடுத்துள்ள அறிக்கை, அமெரிக்காவின் முகத்தில் அடித்தது போல் உள்ளது. "ஹார்முஸ் நீரிணையில் ரோந்து செல்ல அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை; அது எங்கள் எல்லை, எங்கள் செங்கோட்டுப் பகுதி (Red Line)" என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கத் தளங்களை தரைமட்டமாக்கித் தங்கள் பலத்தை நிரூபித்துள்ள ஈரான், இந்த முக்கிய நீர் வழித்தடத்தில் அணுவளவும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.
ஈரானியத் தூதுக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கும் செய்தி இன்னும் அதிர வைக்கிறது. "அமெரிக்கா பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தது அமைதிக்காக அல்ல, சர்வதேச அரங்கில் தான் இழந்த கௌரவத்தைத் தேடுவதற்காக மட்டுமே" என்று அவர் தெரிவித்தார்.
ஈரானிடம் போரில் தோற்று, முட்டுச்சந்திற்கு வந்த பிறகும், அமெரிக்கா தனது "அதிகப்படியான எதிர்பார்ப்புகளை" குறைக்கவில்லை என்பதே இந்தப் பேச்சுவார்த்தை முறியக் காரணம் என ஈரான் குற்றம் சாட்டுகிறது.
"அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பேச்சே இல்லை!" - ஈரானின் இந்த ஒற்றை வரி, ராஜதந்திரத்தின் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதை உலகிற்கு உணர்த்துகிறது.
உலக நாடுகள் அமைதியை எதிர்நோக்கி இருந்த வேளையில், இந்த முறிந்த பேச்சுவார்த்தை மீண்டும் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
நான் ஏற்கனவே கூறியது போல் இந்த பேச்சுவார்த்தை எல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம்.
- முகிந்தன் துரைராஜசிங்கம்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
