நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்மாயில் சப்ரிக்கு பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு தேசிய இதய நிறுவனத்தில் (ஐஜேஎன்) பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இயல்புக்கு மாறான இதயத் துடிப்பால் அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டதாக ஐஜேஎன் அறிவித்தது.

2021-2022ஆம் ஆண்டுக்கான மலேசிய குடும்ப முன்னெடுப்புத் திட்டத்தின் செலவுகள், நிதிகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தபோது இதயப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 66 வயதான இஸ்மாயில் சப்ரி, நேற்று ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset