நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அஸ்டன் வில்லா அணியினர் வெற்றி பெற்றனர்.

ரெனாதோ அரங்கில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் அஸ்டன்வில்லா அணியினர் பொலாக்னா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்டன்வில்லா அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பொலாக்னா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அஸ்டன் வில்லா அணிக்காக ஒலிவ் வாட்கின்ஸ் இரு கோல்களை அடித்தார்.

மற்றொரு கோலை எஸ்ரி கோன்சா அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் பிராய்பர்க் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

போர்தோ அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் போரஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset