நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா நெருக்கடியில் உள்ளது; விலை உயர்வை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

ஈரான் போரினால் தூண்டப்பட்ட உலகளாவிய எண்ணெய் நெருக்கடியைத் தொடர்ந்து, வரும் காலத்தில் எதிர்பார்க்கப்படும் விலை உயர்வுகளுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பொதுமக்களுக்கு இதனை வலியுறுத்தினார்.

இந்த நெருக்கடியால் எழும் பிரச்சினைகளைக் கையாள அரசுக்கு உதவத் தயாராக இருக்குமாறு அரசு ஊழியர்களுக்கும் அவர் நினைவூட்டினார்.

நாம் இன்னும் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிற்காததால், இன்னும் பிரச்சினை வரவில்லை என்று சில சமயங்களில் மக்கள் நினைக்கின்றனர்.

ஆனால்  நாம் உண்மையில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

இன்னும் பிரச்சினை இல்லை. அது உண்மையல்ல. விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், உண்மையில் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது.
இந்த மாதம் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயரவில்லை.

ஆனால் உர இறக்குமதியின் சதவீதம் மிக அதிகமாக இருப்பதால் உரங்களின் விலைகள் கணிசமாக உயரும்.

ஆக, அதைத்தான் நான் விவரித்தேன். எனவே, ஒரு பிரச்சனை வரும் வரை ஆச்சரியப்பட நாம் காத்திருக்க வேண்டாம்.

இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பதில் நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset