நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முத்தம்மாள் சொந்த ஈபிஎப் சேமிப்பு பணத்தை கோட்டால் என்ன தவறு?: டத்தோ கலைவாணர்

சுங்கைபூலோ:

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முத்தம்மாள் சொந்த ஈபிஎப் சேமிப்பு பணத்தை கோட்டால் என்ன தவறு உள்ளது.

சமூக ஆர்வலர் டத்தோ டாக்டர் கலைவாணர் இக்கேள்வியை எழுப்பினார்.

என் அருகில் இருக்கும் முத்தம்மாள் ஜொகூர் மாநிலத்தில் வசித்து வருகிறார்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுல்ல இவர் நடப்பதற்கு பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்.

இதன் அடிப்படையில் தான் மருத்துவர்களின் முழுமையான அறிக்கைகளை கொண்டு காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டை பெற்றார்.

இதே போன்று ஈபிஎப்பில் உள்ள தனது சேமிப்பு பணத்தை மீட்பதற்காக அவர் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.

ஆனால் முழுமை பெறவில்லை எனக் கூறி அவரின் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தான் சுங்கைபூலோவில் உள்ள ஈபிஎப் தலைமையகத்திற்கு வந்து மகஜரை வழங்கினோம்.

பாதிக்கப்பட்ட முத்தம்மாள் மற்றவர்களின் பணத்தையோ யாரிடம் கடனோ கேட்கவில்லை.

தனது சொந்த சேமிப்பை தான் அவர் கேட்கிறார்.

ஆக இவ்விவகாரத்திற்கு ஈபிஎப் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று டத்தோ டாக்டர் கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset