நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புந்தோங்கில் கும்பல் தகராறு: ஒருவர் வெட்டிக் கொலை

ஈப்போ:

புந்தோங்கில் கும்பல் தகராறு காரணமாக ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பேரா போலிஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் இதனை கூறினார்.

நேற்று இரவு இங்குள்ள புந்தோங் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதற்கு கும்பல்களுக்கு இடையேயான தகராறின் காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

ஒரு கார் வாடகைக் கடையில் நடந்த இந்தச் சம்பவம் இனவெறிக் கூறுகளுடன் தொடர்புடையது அல்ல என்பதை போலிஸ் தரப்பும் உறுதிப்படுத்துகிறது.

இந்த வழக்கில் சந்தேக நபராகக் கருதப்படும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பலரைக் கைது செய்வதற்கும் வழிவகுக்கும் என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் இனப் பிரச்சினைகளுடம் சற்றும் தொடர்பில்லாதது.

ஏனெனில் இது கும்பல்களுக்கு இடையேயான ஒரு போராட்டம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset