செய்திகள் மலேசியா
எரிசக்தி நெருக்கடி குறித்த போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக 22 பேர் மீது விசாரணை
கோலாலம்பூர்:
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பாக சமூக, இணைய ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்பியது குறித்து மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் 36 விசாரணை ஆவணங்களைத் தொடங்கியுள்ளது.
விசாரணைக்கு உதவுவதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து மொத்தம் 22 நபர்கள் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக எம்சிஎம்சி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூடுதல் விசாரணை, நடவடிக்கைக்காக மொத்தம் ஆறு விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வழிவகை செய்யும் 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-இன் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் சமூக ஊடகத் தளங்கள், இணைய ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை எம்சிஎம்சி கடுமையாகக் கருதுகிறது.
தற்போதுள்ள சட்டங்களை மீறுவதாகக் கண்டறியப்படும் எந்தவொரு தனிநபர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 12:22 pm
பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் காரில் கள்ள உறவு
April 8, 2026, 12:06 pm
மலேசியாவில் எண்ணெய் விலை உயர்வதற்கு எந்தக் காரணமும் இல்லை: ஹாடி அவாங்
April 8, 2026, 11:13 am
குவாந்தான் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி: இருக்கையிலேயே உயிரிழந்த பெண்
April 8, 2026, 10:45 am
எல்லையில் பரபரப்பு: பெட்ரோல் கடத்தலில் ஈடுபட்ட தாய்லாந்து ராணுவ வீரர் மலேசியாவில் கைது
April 8, 2026, 10:28 am
இறக்குமதி பொருட்களின் விலைகள் 3 முதல் 10% வரை உயரக்கூடும்: மைடின் உரிமையாளர்
April 8, 2026, 10:27 am
ஜொகூர் அம்னோ தனித்துப் போட்டியிடுவதையே விரும்புகிறது: 40 தொகுதிகளை இலக்காக கொண்டுள்ளது
April 8, 2026, 10:26 am
தனியார் உயர் கல்விக் கூட ஆராய்ச்சித் திட்ட ஊழல்: இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வர் கைது
April 8, 2026, 10:09 am
