நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவாந்தான் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி: இருக்கையிலேயே உயிரிழந்த பெண்

குவாந்தான்: 

விரைவுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்த 50 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், பேருந்து நிலையத்தை வந்தடைந்தபோது தனது இருக்கையிலேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இப்பேருந்து கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நோக்கிப் பயணமானபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்து அதன் இலக்கான இந்திரா மஹ்கோதா பேருந்து நிலையத்தை அடைந்தும், அந்தப் பெண் இறங்காததைக் கண்டு பேருந்து நடத்துனர் சோதித்தபோது அவர் சுயநினைவின்றி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் அந்தப் பெண்ணைப் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் குவாந்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான எந்தச் சூழலும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் நீண்டகாலமாகச் சில உடல்நலப் பாதிப்புகளுக்குச் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இயற்கை மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சம்பவம் குறித்துப் போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து பதுயணிகள், ஊழியர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset