செய்திகள் மலேசியா
விலைவாசி உயர்வு: சாமானிய மக்களின் எதார்த்த நிலையைப் பிரதிபலிக்கும் அக்மலின் துணிச்சலான கருத்து
கோலாலம்பூர்:
சமீபகாலமாகப் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் அம்னோ இளைஞர் அணித் தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மத் அக்மல் சாலே, தற்போது மலேசியர்களின் பொருளாதார நிலை குறித்து முன்வைத்துள்ள கருத்து கவனித்தக்க ஒன்றாக உள்ளது.
பொதுமக்கள் ஏற்கனவே தங்கள் செலவுகளைக் குறைத்து, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், சாதாரண மக்கள் தங்களின் 'பெல்ட்டை இறுக்கிக்கொண்டு' (Tightening the belt) வாழப் பழகிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
அரசின் மானியக் குறைப்பு நடவடிக்கைகளும், வரி மாற்றங்களும் சாமானிய மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அக்மல் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் லாபங்களுக்காகப் பேசினாலும், தற்போது அவர் எழுப்பியுள்ள இந்தப் பொருளாதாரப் பிரச்சினை ஒவ்வொரு மலேசியக் குடும்பத்தின் எதார்த்த நிலையைத் பிரதிபலிக்கிறது.
மக்கள் ஏற்கனவே தங்களால் இயன்றவரை சிக்கனமாக இருக்கும்போது, மீண்டும் அவர்களிடமே தியாகத்தை எதிர்பார்ப்பது நியாயமற்றது என்ற கூற்று இதில் மேலோங்கியுள்ளது.
மறுபுறம், அரசாங்கம் தனது செலவினங்களைக் குறைப்பதிலும், ஊழலை ஒழிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. சாதாரண குடிமக்கள் தங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளும் நிலையில், அதிகார வர்க்கமும் அதேபோன்ற பொறுப்புணர்வைக் காட்ட வேண்டும் என்பதே அக்மலின் வாதமாக உள்ளது. இது வெறும் அரசியல் விமர்சனமாக மட்டுமன்றி, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மக்களின் மனக்குமுறலாகவும் பார்க்கப்படுகிறது.
டத்தோ அக்மல் சாலே முன்வைத்துள்ள இந்தக் கருத்து, கட்சிப் பாகுபாடின்றி பலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக இருக்கிறது. ஏனெனில், நாட்டின் பொருளாதாரச் சுமை என்பது அடித்தட்டு மக்களின் முதுகைத் தாக்கும் வேளையில், அவர்களின் வலியைப் புரிந்துகொண்டு பேசுவது அவசியமாகிறது. "மக்கள் ஏற்கனவே தங்களைத் தயார்படுத்திக் கொண்டுவிட்டனர்; இனி அரசாங்கத்தின் நடவடிக்கைகளில்தான் மாற்றம் வரவேண்டும்" என்பதை டத்தோ அக்மல் சுட்டிக்காட்டி உள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 12:22 pm
பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் காரில் கள்ள உறவு
April 8, 2026, 12:06 pm
மலேசியாவில் எண்ணெய் விலை உயர்வதற்கு எந்தக் காரணமும் இல்லை: ஹாடி அவாங்
April 8, 2026, 12:05 pm
எரிசக்தி நெருக்கடி குறித்த போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக 22 பேர் மீது விசாரணை
April 8, 2026, 11:13 am
குவாந்தான் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி: இருக்கையிலேயே உயிரிழந்த பெண்
April 8, 2026, 10:45 am
எல்லையில் பரபரப்பு: பெட்ரோல் கடத்தலில் ஈடுபட்ட தாய்லாந்து ராணுவ வீரர் மலேசியாவில் கைது
April 8, 2026, 10:28 am
இறக்குமதி பொருட்களின் விலைகள் 3 முதல் 10% வரை உயரக்கூடும்: மைடின் உரிமையாளர்
April 8, 2026, 10:27 am
ஜொகூர் அம்னோ தனித்துப் போட்டியிடுவதையே விரும்புகிறது: 40 தொகுதிகளை இலக்காக கொண்டுள்ளது
April 8, 2026, 10:26 am
