நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனியார் உயர் கல்விக் கூட ஆராய்ச்சித் திட்ட ஊழல்: இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வர் கைது

ஈப்போ:

தனியார் உயர் கல்விக் கூட ஆராய்ச்சித் திட்ட ஊழல் தொடர்பில் இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வரை எம்ஏசிசி கைது செய்துள்ளது.

இரண்டு விரிவுரையாளர்கள், எண்ணெய் சார்ந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், பொறியியல் நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு தனியார் உயர்கல்விக் கூடத்தில் ஆராய்ச்சித் திட்டங்களைப் பெற்றுத் தருவதற்கு உதவியதற்காகப் பல நிறுவனங்களிடமிருந்து சுமார் 5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரி பெற்றது.

அத்துடன் ஆராய்ச்சி நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கு குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக இந்தக் கைதுகள் செய்யப்பட்டுள்ளன.

தகவல்களின்படி, 40 வயதுகளில் உள்ள மூன்று ஆண்கள், ஒரு பெண் உட்பட அனைத்து சந்தேக நபர்களும், நேற்று பிற்பகல் சுமார் 2 மணி முதல் 5 மணிக்குள் பேரா ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணைக்கு உதவும் வகையில் ஏழு வாகனங்களைப் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சுமார் 8.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 70 வங்கிக் கணக்குகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset